நீலகிரி,
ஊட்டி அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று பகல் 11.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் சுமார் 36 பயணிகள் இருந்தனர். மந்தாடா அருகே மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பேருந்தின் ஓட்டுநர் பிரகாஷ் (38) மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: