போராடுவோம் தமிழகமே என நாம் முழங்கி வரும் வேளையில் போராடவே கூடாது என ஏகாதிபத்தியம் சொல்கிறது. முதலாளித்துவம் சொல்கிறது. மோடி சொல்கிறார். எடப்பாடி சொல்கிறார். இதற்கு மத்தியில் சமீபத்தில் இன்னொரு குரலும் ஒலிக்கிறது. திரைப்படங்களில் போராடச் சொன்ன குரல் நேரடியாக மக்களைப் பார்க்கும் போது போராடாதீர்கள் என்கிறது. 13 பேர் உயிரை பலி கொண்ட நகரத்தில் நின்று சமூக விரோதிகள், விஷக்கிருமிகள் என வாய்க்கு வந்த படி பேசுகிறார்.

உண்மையில் சமூக விரோதிகளாக இருப்பது அனில் அகர்வால், மத்திய பாஜக அரசு, மாநில
எடப்பாடி அரசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர்தான் சமூக விரோதிகள்.
ரஜினி சினிமாவில் ஒன்றும், நிஜ வாழ்க்கையில் ஒன்று மாகப் பேசுகிறார். கட்சியே இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் இப்படியென்றால் கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தால் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கமாட்டாரா? இவரைத் தான் உய்விக்க வந்த மகானாக காட்ட முயற்சிக்கிறார்கள்.
எங்களைப் பார்த்து உண்டியல் குலுக்கிகள் என்கிறார்கள். இதில் எங்களுக்குப் பெருமையே. வெட்கப்பட வேண்டியது சூட்கேஸ் குலுக்கிகளே!சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதிலிருந்து…

Leave a Reply

You must be logged in to post a comment.