திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் உள்ளார். இவர் தொட்டிபாளையம், மன்னரை, வேலம்பாளையம், செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர்களை முறையற்ற வகையில் பணியிட மாற்றம் செய்துள்ளார். இதேபோல், சார் ஆட்சியர் தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கினை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சார் ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கை கைவிடக்கோரி திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று இரவு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று இரவு தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு தொடங்கிய இப்போராட்டம் வெள்ளி காலை வரை தொடர்ந்தது. இப்போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: