சேலம்,
சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணன் என்பவரை வியாழனன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டினர். இதில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் குற்றவாளிகளை கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து கலைந்து சென்றனர்

Leave A Reply

%d bloggers like this: