தீக்கதிர்

சிஐஏவின் தீவிரவாத பட்டியலில் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஸத், பஜ்ரங்தாள் சேர்ப்பு

புதுதில்லி :

ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஸத் மற்றும் பஜ்ரங்தள் போன்ற இந்துமதவெறி  அமைப்புகளை உலக தீவிரவாத அமைப்புகளில் பட்டியலில் அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனத்தின்(CIA)  இணைந்திருக்கிறது. இதுகுறித்த தகவலை  வோல்டு ஃபேக்ட்புக்(world factbook) என்ற செய்தி வலைதளம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் தலைமை அமைப்பாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் தேசியவாத அமைப்பு என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், விஸ்வ ஹிந்து பரிஸத், பஜ்ரங்தள் மற்றும் ஜமியத் போன்றவற்றை மத தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்க உளவு நிறுவனம் சேர்த்துள்ளது. ஹுரியத் அமைப்பை பிரிவினைவாத இயக்கம் என அறிவித்துள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஸத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இரண்டையும் அரசியல் அழுத்த குழுக்கள் மற்றும் தலைவர்கள் கொண்ட பட்டியலிலும் சேர்த்துள்ளது.