தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு-குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டனர். விவசாயி விவசாயத்தை விட்டு ஓடுகிறான். தொழிலாளி வர்க்கம் தொழிலை விட்டு
ஓடுகிறான்.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் ஏற்றுமதி வர்த்தகம் 26 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துவிட்டது. பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன. தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. முன்னேற்றமும் இல்லை. கார்ப்பரேட்டுகள் மட்டுமே வளர்ந்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்து உண்டியல் குலுக்கிகள் என்கிறார்கள். உழைப்பாளி மக்களுக்காக போராடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அது மக்களிடம் செல்லும் போது தாராளமாக நிதி தருகிறார்கள். உண்டியல் கட்சி என்பதில் பெருமை தான். இந்த உண்டியல் கட்சி தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசியதிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: