மோடி அரசு திட்டக் கமிஷனைக் கலைத்து விட்டு நிதி ஆயோக்கை
கொண்டுவந்தார்கள். இது 20க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூட
வேண்டுமெனச் சொல்கிறது. தமிழகத்தின் கைப்பாவை அரசும் எல்லா மாவட்டங்களி
லும் ஆய்வு செய்து இதன்படி சுமார் 3000 பள்ளிகள் இருப்பதாக பட்டியல் தயார்
செய்து வைத்துக் கொண்டு வெளியிடலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருக்கிறது. அரசுப் பள்ளிகளை மூடிவிட்டால் ஏழை, எளிய மாணவர்கள் எங்கே போவார்கள்? ஒரு பள்ளியைக் கூட மூடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது.

கல்வியில் கேரளத்தைப் போல தமிழகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். உம்மன்சாண்டி அரசு மூடிய 7 பள்ளிகளை பினராயி விஜயன் அரசு திறந்து வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள அரசுப் பள்ளிகள் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்அடிப்படையில் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 1.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 1.65 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு என்றால், ஆட்சி என்றால் அப்படி இருக்க வேண்டும். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி,ராமகிருஷ்ணன் பேசியதிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: