தாராபுரம்,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கக்கோரி தாராபுரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரதிமாதம் 7 ஆம் தேதி முறையாக சம்பளம் வழங்க வேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான முழுமையான சம்பளத்தை வழங்கவேண்டும். இஎஸ்ஐ அட்டை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத் தொடர்புதொழிலாளர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் தொலைபேசி நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் என்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பழனிச்சாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணுசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர்கள் எஸ்.செல்வராஜன், பி.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியம், நாச்சிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பி.அரவிந்தன் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: