சென்னை-சேலம் இடையே எட்டுவழி பசுமைச் சாலை அமைக்கப்போவதாகச் சொல்லி சட்ட விதிகளை மதிக்காமல் காவல்துறை துணையோடு விவசாயிகளின் விளைநிலங்களை பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு திட்டத்திற்காக நிலத்தை  கையகப்படுத்தும்போது அதற்கான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அந்த கருத்துக்கேட்புக்கூட்டத்தில் என்பது சதவீதத்தினருக்கு அதிகமானோர் நிலம் தர சம்மதிக்க
வில்லையெனில் அந்தத் திட்டத்தை செயல் படுத்தக்கூடாது.

எட்டுவழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தும் விஷயத்தில் சட்டத்தை தமிழக அரசும், காவல்துறையும் மதிக்கவில்லையெனில் விவசாயிகளும் மதிக்கமாட்டார்கள்.சாலை வேண்டும் என்று மக்கள் கூறும் இடங்களில் சாலை போட அரசு மறுக்கிறது. சாலை தேவையில்லாத இடத்தில் சாலைபோடுவோம் என்கின்றனர்.

எட்டுவழிச்சாலைக்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் அழிக்கப்பட உள்ளது. ஏழு முதல் எட்டு மலைகள் வரை அழிக்கப்படஉள்ளன. சாலை போட்டால் தொழில் வளர்ச்சி பெறும் என்பது ஊரை ஏமாற்றும் வேலை. சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசியதிலிருந்து

Leave A Reply

%d bloggers like this: