திருச்சிராப்பள்ளி:
சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கவும் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் களை களத்தில் சந்திப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாளன்று குண்டுக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நடைபெற்ற சம்ப
வங்கள் குறித்து கேட்டறிந்த முதல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான்.
சம்பவம் குறித்த தகவலறிந்தவுடன் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தூத்துக்குடிக்கு வருகை தந்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்க
ளையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடியில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்
தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணிக்கு காவல்துறை இதுவரை அனுமதி வழங்கவில்லை. உரிமைக்காகப் போராடுபவர்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும். இதிலுள்ள நியாயத்தை கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை யா?. ஜூன் 18-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். மாறாக தடை விதித்தால் அங்கு
ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் எடப்பாடி அரசும், தமிழக காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஏழாவது ஆண்டாக காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் தனக்குள்ள இணக்கத்தைப் பயன்படுத்தி தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டாமா? தண்ணீர் பெற்றுத் தரவில்லை என்றால் எடப்பாடி அரசுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற பதிலைத்தான் மக்கள் தருவார்கள்.

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிக்க முயற்சி நடைபெறுகிறது. விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் பட்டியல் இனத்தவர் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற
கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், இதற்கு வழிகாட்டியாக கேரளம் உள்ளது. அங்கு தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கோவில் அர்ச்சகர்களாக நிய
மிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட அனைவரும் பக்தியுடன் விபூதி உள்ளிட்ட வற்றை பெற்றுச் செல்வதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

தமிழகத்தில் பல கோவில்களில் தலித் மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது. வரும் காலத்தில் ஆலயத்திற்கு நுழையும் போராட்டத்தை அல்ல கோவில் கருவறைக்குள் நுழை
யும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.கோவையில் புதிய தலை
முறை தொலைக்காட்சி சார்பில் வட்ட மேசை விவாதம் நடைபெற்றது. அதில் இயக்குநர் அமீர் ஒன்றரை நிமிடங்கள் கூடபேசவில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டத்தை நடத்த விட
மாட்டோம் என கலவரம் செய்தனர். தமிழகத்தில் விவாதமே நடத்தக்கூடாதா? சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அமீர் கருத்துக் கூறக்கூடாதா?

பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் கும்பல், சிறுபான்மை மக்களின்உரிமையைப் பறிக்க நினைத்தால் செங்கொடி இயக்கம் அவர்களைக் களத்தில் சந்திக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.