மேட்டுப்பாளையம்,
கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை மருத்துவ குணம் மிக்க துரியன் பழங்களின் சீசன் துவங்கியுள்ளது.

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்னை பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ன நிலை நீடிப்பதால் இங்கு துரியன்பழ மரங்கள் செழித்து வளர்கின்றன. துaரியன் பழங்களின் சீசன் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையாகும். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் நூற்றுக்கணக்கான துரியன் பழங்கள் காய்த்துள்ளன. முட்கள் நிறைந்த உயரமான இம்மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதால் இதில் உள்ள பழங்கள் பழுத்து தானாக விழும் வரை காத்திருந்து துரியன் பழங்களை சேகரிக்கின்றனர். சிறிய வகை பலாப்பழங்களை போல்முட்களோடு காட்சியளிக்கும் இப்பழங்களை உடைத்தால் உள்ளே நான்கு சுளைகள் கொண்ட பழங்கள் காணப்படும்.

மருத்துவ குணம்மிக்கதாக, ஆண்டில் சில மாதங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் இப்பழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் பலரும் இங்குள்ள அரசு பழப்பண்ணைகளில் ஏற்கனவே முன்பதிவு செய்து தற்போது இப்பழங்களை வாங்கி செல்கின்றனர். கல்லார் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் விளையும் துரியன் பழங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள பழக்கடைகளிலும் விற்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: