தீக்கதிர்

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தை படுகொலை

புதுக்கோட்டை,
புதுக்கோட்டைஅருகே மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக் கோட்டை அருகே அரியூரில் அருண்குமார் என்பவர் மது அருந்த பணம் தர மறுத்ததால் அவரது தந்தையையே சரமாரியாக வெட்டினார் . இதையடுத்து படுகாயம் அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.