ஈரோடு,
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர்கனமழையால் பவானி அணையின் நீர் மட்டம் 69 கனஅடியை எட்டியுள்ளது.

ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் முக்கியநீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையானது பவானி ஆறு மற்றும் காட்டாறான மாயாறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்து சேருகிறது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்களன்று அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. இது புதனன்று
66 அடியாக உயர்ந்தது. வியாழனன்று காலை 3 அடி உயர்ந்து 69 கன அடியாக உயர்ந்தது. தற்போது அணைக்கு விநாட்டிக்கு 11 ஆயிரத்து 832 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் குடிநீருக்காக வழக்கம்போல் 200 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

Leave A Reply