திருச்சிராப்பள்ளி:
சிவப்புச் சட்டையும் காக்கி கால்சட்டையும், காக்கித் தொப்பியுமாக மிடுக்குடன், கையில் சிவப்பு பதாகையை ஏந்தி அணிவகுத்த ஆயிரக்கணக்கான செந்தொண்டர்களின் எழுச்சி நடை, திருச்சி கோகினூர் தியேட்டர் பகுதியை அதிரச்செய்தது. அங்கிருந்து தென்னூர் உழவர் சந்தை வரை சென்ற பிரம்மாண்டமான செந்தொண்டர் அணிவகுப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் பிரச்சாரப் பேரியக்கத்துடன் சங்கமித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் இந்த அணிவகுப்பும், குமரி மாவட்டம்  கொல்லங்கோட்டிலிருந்து அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கடலூரி லிருந்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்
ணன், வேலூரிலிருந்து மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், எட்டையபுரத்திலிருந்து மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், திருத்தணியிலிருந்து மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், நீலகிரி மாவட்டம் எருமாட்டிலிருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மோடி – எடப்பாடி அரசுகளின் மக்கள்விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு திருச்சி வந்தடைந்த ஆறு பயணக்குழுக்களும் எழுச்சிமிகு முழக்கங்களுக்கிடையே சங்கமித்தன.இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் செந்தொண்டர் அணிவகுப்பு மரியாதையை கட்சி யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து பொதுக்
கூட்ட மேடைக்கு பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வருகை தந்த போதும் செந்தொண்டர்
அணிவகுப்பு மரியாதை மிடுக்குடன் அளிக்கப்பட்டது. கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுச்சிமிகு உரை யினை ஆற்றினார். கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ.சவுந்தரராசன், உ.வாசுகி ஆகிய தலைவர் களும் உரையாற்றினர். முன்னதாக திருச்சி மாந கர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வரவேற்க, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.