சேலம்,
விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்திட வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கத்தேரி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி கத்தேரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர் அலுவலரிடம் இரண்டு வருடத்திற்கு முன்பு முறையிட்டனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர் துறை உற்பத்தியாளர்கள் மற்றும்
தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டது. இருப்பினும் இரண்டு வருடங்கள் கழித்தும் இதுவரை உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை. இதனை கண்டித்தும் கூலி உயர்வை முறையாக அமல்படுத்திட வலியுறுத்தியும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கத்தேரி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை நிர்வாகி குழந்தைவேல் தலைமை வகித்தார். மாநில தலைவர் கே.சி.கோபிக்
குமார் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.கே.சேகர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடிவில், மாநிலப் பொதுச்செயலாளர் எம்.சந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இப்போராட்
டத்தில் திரளான விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: