நீலகிரி,
உதகை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று காலை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமான மலைப்பகுதிகளில் பேருந்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே மந்தடா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழமான பள்ளத்தில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: