கோவை,
கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வியாழனன்று கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிட்டி பாபு (39). இவரை கடந்த ஏப்ரல் மாதம்5 ஆம் தேதி கண்ணன்,சந்தோஷ், சக்திவேல் மற்றும் சுரேஷ் ஆகியோர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில், சந்தோஷ் என்பவரை தவிர மற்ற மூவரையும் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான சந்தோஷைத் தேடி வந்தனர். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி தலைமறைவாக இருந்த சந்தோஷ் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர்கள் மீது ஏற்கனவே, கொலை,கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply