கோவை,
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு இரத்த வங்கிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்து பேசுகையில், இரத்த தானம் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி பெண்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையிலும், அறுவை சிகிச்சை மற்றும் விபத்து ஏற்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படும் பட்சத்தில் எவ்வித தயக்கமின்றி இரத்த தானம் செய்ய அனைவரும் தன்னார்வமாக முன்வர வேண்டும்.  கோவை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் 19 தனியார் ரத்த வங்கிகளும்,6 இரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 2017- 2018 ம் ஆண்டில் 4 அரசு இரத்த வங்கிகள் மூலம் 196 முகாம்கள் நடத்தப்பட்டு 18 ஆயிரத்து 535 யூனிட்இரத்தம் சேகரிக்கப்பட்டு அவசர காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.முன்னதாக, இந்நிகழ்விற்கு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மாவட்ட திட்ட மேலாளர்மரு.சுந்தரேசன் மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம்.குமணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குருதி பரிமாற்றக் குழுமம் அலுவலர் ஏ.மங்கையரசி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பி.அசோகன், சுகாதாரப்பணி துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி மற்றும் மருத்துவப்பணி இணை இயக்குநர் உட்பட ஏராள
மானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: