டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் இன்று காலை 6.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தேச விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.

Leave A Reply

%d bloggers like this: