புதுதில்லி:
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் இருந்தாலும், வலிந்து ஹிந்தியைத் திணிப்பது, மத்திய ஆட்சியாளர்களின் நீண்டநாள் முயற்சியாக இருந்தது வருகிறது. அதிலும் மோடி அரசு ஹிந்தித் திணிப்பில் மிகத் தீவிரமாக இருக்கிறது.

இதனொரு பகுதியாகவே, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியில் சேருவதற்கான தகுதியில் ‘ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்’ என்று அறிவித்துள்ளது.‘கொல்கத்தாவில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு ஹிந்தி மொழி குறித்த அடிப்படை அறிவைக் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்; அரசின் கொள்கையின்படி இந்த நிறுவனங்களிலுள்ள ஊழியர்கள் கட்டாயம் தேசிய மொழியை (ஹிந்தி) தெரிந்திருக்க வேண்டும்’ என்று வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.மத்திய அரசின் இத்திட்டத்துக்கு ஹிந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.