பாண்டியன் வங்கி, பல்வன் வங்கி, திரிபுரா கிராமிய வங்கி, காவிரி கிராமிய வங்கி போன்ற 59 அரசுமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் 10 ஆயிரத்து 190 பணியிடங்களுக்கான வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் (மல்டிபர்பஸ்) பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபீபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

பணி: Group “A”-Officers (Scale-I, II & III)
Group “B”-Office Assistant (Multipurpose)
காலியிடங்கள்: 10190

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2.7.2018 ஆம் தேதியின் அடிப்படையில் தகுதி சரிபார்க்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.6.2018 தேதியின்படி 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு, பொது நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100, மற்ற பிரிவினர்களுக்கு ரூ. 600. இதனை ஆன்-லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.7.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CRP_RRB_VII.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: