திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் அடுத்த செட்டிபாளையம் அன்னையம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் – கலாதேவி தம்பதியினர்மகள் காவ்யாஸ்ரீ(16). திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். செவ்வாயன்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரமாகியும், கழிவறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த கலாதேவி கழிவறை கதவின் அருகில் நாற்காலியை போட்டு உள்ளே பார்த்துள்ளார். கழிவறையில் காவ்யாஸ்ரீ துப்பட்டாவால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டுள்ளார்.  இது குறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் ஏதேனும் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்கொலை செய்த மாணவியின் பெற்றோரை திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், தவறு நடந்திருப்பதாக விசராணையில் தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். திருப்பூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.