நாமக்கல்,
போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்தை முன்வைத்து நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

மக்கள் வாழ்வில் மாற்றம் காண, மாற்று கொள்கையை முன்வைத்து போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் 6 முனைகளிலிருந்தும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் வேலூரில் இருந்து புறப்பட்டபிரச்சார பயணக்குழுவினர் புதனன்று நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.குமாரபாளையம் ஆனங்கூர் செல்லும் சாலையில் நடைபெற்ற பிரச்சாரஇயக்கத்திற்கு நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வெப்படை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கூட்டததிற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர் முருகேசன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு ஏ.ஆதிநாரயணன் தலைமை வகித்தார், இதேபோல், பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்ஆர்.ரவி தலைமை வகித்தார். முத்துகாபட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் வி.சதாசிவம் தலைமை வகித்தார்.

நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். இப்பிரச்சார மையங்களில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், டி.ரவீந்திரன், பி.சுகந்தி, எஸ்.கண்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், இந்த பிரச்சார இயக்கங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, ஜெயமணி, சுரேஷ், பெருமாள், எம்.அசோகன், ஏ.டி.கண்ணன் மற்றும் மாவட்ட குழு, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பிரச்சார குழுவினருக்கு அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

ஈரோடு:
இதேபோல், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் நீலகிரி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு புதனன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த பிரச்சார பயணக்குழுவினர் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சத்தி தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார் தலைமை வகித்தார். இதன்பின் கோபிச்செட்டிபாளையம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இப்பிரச்சார மையங்களில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், கே.கனகராஜ், மாநிலகுழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், கே.காமராஜ், ஆர்.பத்ரி, ஏ.ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலதுணை பொதுச்செயலாளர் யூ.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், இந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, கே.துரைராஜ், ஜி.பழனிசாமி, எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்டகுழு, நகர, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.