திருப்பூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று 3 ஆம் நாளாக நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் தொகுப்பூதியத்தை பணியாற்றிய காலத்தை நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும். தமிழக அரசாணை 56 ல் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை ரத்துசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைபாளர் இராஜேந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் நிரைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.