தில்லி பொது நூலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நூலக அறிவியல் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Library & Information Officer
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று நூலக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள்.

பணி: Library & Information Assistant
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று நூலக அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் அல்லது இளங்கலை, முதுகலை பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35க்குள்
பணி: Driver
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200
வயது வரம்பு: 18 முதல் 27க்குள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900
வயது வரம்பு: 27க்குள்
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நூலக் அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடப்பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை “Secretary, Delhi Library Board” என்ற பெயருக்கு டி.டி.யாகவோ அல்லது ஐபிஓவாகவோ எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.dpl.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy.Director(Admn), Delhi Public Library, S.P.Mukherjee Marg, Delhi – 110 006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.6.2018

Leave a Reply

You must be logged in to post a comment.