திருப்பூர்,
திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் புதனன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகரத்தின் முக்கிய பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் பலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், பலத்த தென் மேற்கு பருவ மழை கோவை மாவட்டத்தில் பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்படக்கூடிய அபாய சூழ்நிலை உள்ளது. திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் நொய்யல் ஆற்றங்கரையோரத்தில்வசிக்கும் பொது மக்களுக்கு, விழிப்புடன் இருக்குமாறும் மற்றும் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Leave A Reply