தாராபுரம்,
தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தாராபுரம், கொக்கம்பாளையம் கிராமம், இடையபட்டியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சுவாவிடம், டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கொக்கம்பாளையம் கிராமம், இடையபட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இடையபட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், கோவில் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் டாஸ்மாக் கடையை கடந்துதான் செல்லவேண்டும். இதனால்,டாஸ்மாக் கடை அமைத்தால் அனைவருக்கும் பெரும் இடையூறாக இருக்கும். எனவே டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply