கோவை,
கோவையில் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழையிலும் கொள்கை முழக்கத்தை முன்வைத்து போராடுவோம் தமிழகமே பிரச்சார இயக்கம் எழுச்சியோடு நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தின் ஆறு முனைகளில் இருந்து திருச்சியில் சங்கமிக்கும் போராடுவோம் தமிழகமே பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையிலான பிரச்சார குழுவினர் செவ்வாயன்று கோவை துடியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பெரியநாயக்கன்பாளைய ஒன்றியச் செயலாளர் என்.பாலமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி உரையாற்றினார். இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட உடையாம்பாளையம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கோபால் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, சி.பத்மநாபன், எம்.கண்ணன், ஏ.ராதிகா உள்ளிட்ட திராளனோர் பங்கேற்றனர்.முன்னதாக, இந்த பிரச்சார பயணத்தின்போது கனமழை கொட்டி வந்தபோதும் பிரச்சார இயக்கம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடித்தும், வானவெடி வைத்தும், எழுச்சி முழக்கங்களோடு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.