சேலம்,ஜீன் 13-
கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குழுக்கிகள் என்பதில் பெருமை படுகிறோம் என சேலத்தில் சிபிஎம் மேற்கு மாநகர குழு சார்பில் நடைபெற்ற எழுவோம் தமிகமே பிரச்சார
பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து பிரச்சார இயக்கம் நடைபெற்று திருச்சியில் முடிவடைகிறது. இதில் வேலூரில் இருந்து புறப்பட்ட பிரச்சார குழு வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு செல்ல உள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் துவங்கிய பிரச்சார குழு மாநகரத்தில் உள்ள பால் மார்கெட் பகுதியில் மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்று பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்று சர்ச்சைக்குரிய கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதும், தற்போது வெளியில் தலையை காட்ட முடியாமல் இருப்பதும் வேடிக்கையான ஒன்று.
போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற ரஜினியின் பேச்சு தவறானது. தமிழக முதல்வர் எடப்பாடி சட்டமன்றத்தில் சேலம் –சென்னை எட்டு வழி சாலை குறித்து பேசும் போது பிரதமரிடம் கெஞ்சி திட்டத்தை வாங்கி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் முதல்வர் பதவியே கெஞ்சிதான் வாங்கியுள்ளார். சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல பல வழிகள் இருந்தும் ஏன் புதிதாக எட்டு வழி சாலை செயல்படுத்தப்படுகிறது. அதில் பல முறைகேடுகளை நடத்துவதே எடப்பாடியின் திட்டம். மேலும் சாலைகளில் பல்வேறு சுங்கச்சாவடிகளை அமைக்கவும் வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பிரதமர் மோடி பெட்ரோல் விலையை குறைக்க வில்லை. தமிழக அமைச்சர்கள் செயல்பாடுகள் கேலிகூத்தானது. தெர்மாகோல் முதல் அவர்களின் கண்டுபிடிப்புகள் தமிழக மக்களுக்கு பிரச்சனைகளை அதிகப்படுத்துவதாகவே உள்ளது.
சேலம்- சென்னை பசுமைவழி சாலை வந்தால் விளைநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். விளைநிலங்களை விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழி
சாலை யாருடைய பயன்பாட்டிகு என்று கேள்வி எழுப்பிய அவர், எட்டுவழி சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளை சேலத்தில் இரவு நேரத்தில் கைது செய்வது என்ன நியாயம்.
இப்படி இரவு நேரத்தில் கைது செய்யும் காவல் துறை ஏன் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நிலம் நீர் காற்றுக்காக போராடிய அப்பாவி மக்கள் மீது காவல் துறை துப்பக்கி சூடு நடத்தியதில் 13 பேர் துட்டுக் கொல்லப்பட்டனர். தமிழக சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை
பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த எந்த விசாரனை ஆணையம் நடத்தும் விசாரணைகள் சம்மந்தமாக இதுவரை எந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை விவாத நிகழ்வில் தமிழிசை உண்டியல் குலுக்கி என பேசியது கம்யூனிஸ்டுகளுக்கு பெருமைதான். எங்கள் தீக்கதிர் பத்திரிகைக்கு பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் தருகிறோம். ஆனால் ஸ்டெர்லைட் சம்மந்தமாக எந்த தவறான செய்தியும் எழுத கூடாது என கூறியதை மறுத்து எங்களுக்கு மக்கள் வாழ்வு மட்டுமே முக்கியம் என தெரிவித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். வேதாந்தா
நிறுவனத்துடன் கைகோர்த்து பணம் வாங்கியவர்கள் பாஜகவினர்.
சேலம் பசுமை வழிச்சாலை என்பது நாட்டின் பசுமையை அழிக்கும். இந்த திட்டம் சேலத்தின் அடையாளமான சேலம் உருக்காலையில் உள்ள கனிமங்களை ஜிண்டால் நிறுவனத்திற்கு கொள்ளையடித்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. மோடி பொதுத்துறை நிறுவனங்களை அழித்துவருகிறார். இளைஞர்களுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தறுவதாக கூறியது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தொழில்வளத்தை ஜிஎஸ்டி என்ற பெயரில் அழித்து சிறு குறு நிறுவனங்களின் வர்த்தகத்தை பாதிப்படைய செய்துள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. ஓட்டல் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை மத்திய மாநில அரசுகளுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. பெண்கள் பயன்படுத்தும் நேப்கின்களுக்கு வரி விலக்கு இல்லை. ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தும் பூ நூலுக்கு வரி விலக்கு உள்ளது. இவர் யாருக்கான பிரதமர் என மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய
அரசு அமைக்க வில்லை. மக்களின் பல கட்ட போராட்டத்தின் விளைவால் இன்று காவிரி ஆணையம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திட்டமிட்டு நீட்
தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் செயல். நீட் தேர்வினால் இன்று அனிதா உள்ளிட்ட மூன்று பேர்
தற்கொலை செய்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு எட்டாகனியான நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு தள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் நீட்
தேர்விற்காக பல படிப்பு மையங்கள் துவங்கி மக்களிடம் கொள்ளையடித்து வருகின்றனர். மருத்துவம் ஏழை மக்களுக்கு எட்டா கனியாகி விட்டது. தற்போது மருத்துவ
மனைகளில் உறுப்புகள் கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவமனைகள் வளர அரசு மருத்துவமனைகள் அழிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல பள்ளிகளை மூட எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் புதிதாக பல அரசு டாஸ்மாக் கடையை திறக்க முடிவெடுத்துள்ளது வெக்ககேடானது.
தொடர்ச்சியாக இப்பிரச்சனையில் மதுபான கடை வேண்டாம் என போராடி வந்த நிலையில் தந்தை குடிக்க கூடாது என மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைகள்
அதிகரித்து வருகிறது. விளை நிலங்களில் விவசாயம் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர் உலக அழகியை பார்த்து பேசக்கூடியவர் பிரதமர் மோடி.
பால் தினகரன் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என இயேசு கூறினார் என பேசியது விமர்சனத்திற்கு உரியது.
இவர் கோவையில் வன நிலங்களை கொள்ளையடித்து காருண்யா பல்கலைகழகத்தை கட்டியவர் இவர் அப்படி மோடியை பற்றி பேசியது தனது நிறுவனத்தை பாதுகாக்க என
விமர்சித்தார். இந்திய பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் பல கோடி ரூபாய் வங்கி கடன்களை வாங்கி வெளி நாடுக்கு தப்பிவிட்டனர். மல்லையா, நீரவ் மோடி,
லலித் மோடி உள்ளிட்டவர்கள் பல கோடி ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றும் நிலையில் கல்வி கடன் கட்டா முடியாத சூழலில் உள்ள மாணவர்களை வங்கி அதிகாரிகள் மிரட்டுவதால் மானத்திற்காக இன்று தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உள்ளது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் இந்து மதவாத அமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பணியமர்த்தும் வேலையை பாஜக செய்துவருகிறது. மேலும்
சாதி வெறியுடன் தமிழகத்தில் கொலைகள் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை கச்சநத்தம் கொலை நடைபெற்றுள்ளது. இனி மக்கள் கவனமுடன் இருக்க
வேண்டும். தேர்தல் நெருங்குவதால் பலர் வந்து மக்களை சந்தித்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தாலும், மக்களின் மீது அக்கறையுடன் செயல்படும் இடதுசாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பக்கத்து மாநிலமான கேரளாவில்
ஒரு நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. இதே ஆட்சி தமிழகத்திலும் நடைபெற மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் சிபிஎம்
மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, எஸ்.கண்ணன், பி.சுகந்தி மற்றும் சேலம் மாவட்ட
செயலாளர் பி.ராம மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், மாநகர மேற்கு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.