உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 21-வது பதிப்பு இன்று இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்குகிறது.இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும்,சவூதி அரேபியா அணியும் மோதுகின்றன.இந்த ஆட்டம் மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறுகிறது.
32 நாடுகள், 736 வீரர்கள், 12 விளையாட்டரங்கள், 64 ஆட்டங்கள், சுமார் 5,81,118 நேரடிப்பார்வையாளர்கள் என அடுத்துவரும் ஒருமாத காலத்திற்கு விளையாட்டு உலகின் அனைத்துக் கண்களும் ரஷ்யாவை நோக்கியபடி சுழலும்… 21-வது உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 32 நாடுகளில் ஒவ்வொரு அணியும் ஒரு தனி கனவுகளுடன் களமிறங்குகின்றன.அந்த கனவுகளில் கோப்பையைக் கைப்பற்றுவோம் என சில நாடுகளும்,அரையிறுதிவரை முன்னேறித் திறமையை வெளிப்படுத்த சில நாடுகளும்,காலிறுதிவரை முன்னேறினாலே அது வெற்றிதான் என நினைக்கும் நாடுகள்,இழப்பதற்கு ஏதுமில்லை ஒருகை பார்த்துவிடலாம் என உற்சாகத்துடன் களமிறங்கும் பல நாடுகள் களமிறங்குகின்றன.உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரையில் இதுவரையில் 8 நாடுகளே மாறி மாறி கோப்பையை வென்று வருகின்றன.இந்த 8 நாடுகளில் இந்த முறை 7 நாடுகள் மட்டுமே களத்தில் உள்ளன.இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இத்தாலி இந்த முறை தகுதிபெற இயலாமல் போய்விட்டது.

பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. அர்ஜெண்டினா, இங்கிலாந்து, உருகுவே இதுவரை கோப்பையை வெல்லாத போர்ச்சுக்கல் ஆகிய அணிகளும் பந்தயக் குதிரைகளாக வலம் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.இருந்தாலும் கால்பந்து ஆட்டத்தில் இதுதான் நடக்கும் என்று அறுதியிட்டுக்கூறிவிட முடியாது.கோப்பையை வெல்லும் கனவுடன் வந்துள்ள சில கத்துக்குட்டி அணிகள் அதிர்ச்சி அளிக்கலாம்.கடந்த காலங்களில் நடப்புச் சாம்பியன்கள் முதல்சுற்றுடன் வெளியேறிய வரலாறுகள் உண்டு. 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா, 1966ல் இத்தாலியை வீழ்த்திய வட கொரியா, 1982ல் ஜெர்மனியைத் தடம்புரளச் செய்த அல்ஜீரியா இதுபோன்ற பல்வேறு உதாரணங்கள் உலகக் கோப்பை வரலாறு நெடுகிலும் உருண்டு கிடக்கின்றன.
யாரும் எதிர்பாராத வகையில் பெல்ஜியம், போலந்து, கொலம்பியா போன்ற அணிகள் கடந்த உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுவரை முன்னேறி அசத்தியது.சிறந்த வீரர்களைக் கொண்ட இந்த 3 அணிகள் ரஷ்ய உலகக்கோப்பை தொடரிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடும் என கணிக்கப்படுகிறது.

செனகல், ஐஸ்லாந்து போன்ற அணிகள் கோப்பைக்காண பந்தயத்தில் வரமாட்டார்கள் என்றாலும் சாம்பியன் அணிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

பீலே:
         கால்பந்து ஓர் அழகிய விளையாட்டு என்று வர்ணித்தார் கால்பந்து ஜாம்பவான் பீலே. அந்த அழகு மைதானத்தில் மட்டுமல்லாது பார்வையாளர் அரங்கிலும் நிறைந்திருப்பதை நாம் காணலாம். கால்பந்து ரசிகர்களுக்கானது. அவர்களுக்காகத்தான் அந்த விளையாட்டு. ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும்போது அந்நாட்டு ரசிகர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவேது. அதே போல் தோற்றால் சிந்தும் கண்ணீருக்கும்…

Leave a Reply

You must be logged in to post a comment.