கோவை,
மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். 8 மணி நேர வேலை, வார விடுமுறை, மிகை நேர ஊதியம் வழங்கிட வேண்டும். இ.எஸ்.ஐ,பி.எப் போன்ற சட்ட சலுகைகளை அமல்படுத்திட வேண்டும். மேலும்மாற்றுபணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டுத்தொடரில் நிறைவேற்றிட வலியுறுத்தி செவ்வாயன்று மாநிலந்தழுவிய அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மூர்த்தி, எல்பிஎப் மாவட்ட தலைவர் ராக்கிமுத்து, பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சுதிர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில்திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு
ஈரோட்டிலுள்ள மா1மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் சங்க பொதுச்செயலாளர் வை.பாண்டியன், எல்பிப் சங்கத்தின் எஸ்.கோபால் மற்றும் பழ.மாரிமுத்து, எம்.சுதாகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இப்போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன், பொன்.பாரதி, எல்பிஎப் சங்கத்தின் ஜோ.சுந்தரம், எல்எல்எப் வெற்றிச்செல்வன், பட்டாளிதொழிற்சங்கத்தின் பொ.வை.ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

உதகை
சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் ஜே.ஆல்தொரை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மகேஷ், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும்,
இப்போராட்டத்தில் பங்கேற்றோர் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால்எதிர்வரும் ஜூன் 28 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.