பொள்ளாச்சி,
பொள்ளாச்சி குரங்கு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு 4வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க செவ்வாயன்று நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்;- வால்பாறை மற்றும் ஆழியார் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குரங்கு அருவியில் இருந்து வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் உடைந்த பாறைகற்கள், மரக்கிளைகள் ஆகியவை குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்துகாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குரங்கு அருவியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: