நாமக்கல்,
பணி நிரந்தரம் செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் குடிநீர் ஆப்ரேட்டர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம்,குடிநீர் ஆப்ரேட்டர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் குடிநீர் ஆப்ரேட்டர்களாக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். கடந்தபல வருடங்களாக பணி புரிந்தும் எங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: