திருப்பூர்,
அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நடுவச்சேரி கிளைச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஊர்ப் பொதுமக்கள் அணிதிரண்டு அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்களன்று வருகை தந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.இம்மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சி புதுக்காலனி வரதராஜ்நகர், வேலாங்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல மாதங்களாக குடிநீர் பிரச்சனை தொடர்கிறது. அத்துடன் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இது தொடர்பாக இருமுறை மனுக்கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே புதுக்காலனி, வரதராஜ் நகர், வேலாங்காடு பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தெரு விளக்குகளை பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: