உடுமலை,
தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமசந்திராபுரம் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடிமங்கலம் ஒன்றியம் இராமசந்திராபுரம் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விளைநிலங்களுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கும் நிலையில், தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இராமசந்திராபுரம் கிளை செயலாளர் எம்.விஜயகுமார் தலைமை தாங்கினார். சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி. விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெ. ரங்கநாதன், திராவிடர் கழகத்தின் புரவலர் மு.வேங்கடசாமி மற்றும் ஓய்வு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சி. ஜெயபிரகாஷ் மற்றும் காளிமுத்து, ரேணுகாதேவி, மாசிலாமணி, வேலுசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.