சென்னை,
ஜாக்டோ-ஜியோ அமைப் பின் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 6வது ஊதியக்குழுவுக்கு பிறகு வழங்கப்படும் சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் நீண்ட நேரம் பட்டியலிட்டார்.

ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங் களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நன்கு அறிவர் என்றும் தெரிவித்தார். ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர், எழிலகம் வளாகத்தில் இரண்டாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவை நிறைவேற்ற முடியாது என்பதையும் அரசு ஊழியர்களும், எதிர்க்கட்சியினரும் அறிந்துள்ளதாலும், மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும், கோரிக்கைகளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு துணை போகக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகளுக்கு இலவச ஆலோசனையையும் துணை முதல்வர் வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.