சென்னை,
சட்டப்பேரவையில் செவ் வாய்க் கிழமை(ஜூன்12) கேள்விநேரம் முடிந்ததும், ஜாக்டோ – ஜியோ அமைப்பு நடத்திவரும் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,“அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிர தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழிலகம் முன்பு நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களை சந்தித்தபோது, புதிதாக எந்த கோரிக்கை யையும் முன்வைக்கவில்லை. ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆதிசேஷய்யா குழுவை கலைக்க வேண்டும் என ஏற்கெ னவே, அரசிடம் வழங்கிய அதே கோரிக்கைகளைத் தான் வலியுறுத்தி வருவதாககூறினார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண அரசும் முதலமைச்சரும் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்துள் ளார்கள். எனவே, அந்த தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார். காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோரும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: