திண்டுக்கல்,

திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருண் கொக்கெய்ன் வைத்திருந்ததாகக் கூறி மதுரை மத்திய போதை தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருபவர் அருண். இவர் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர். இவரது அம்மா மாவட்ட அதிமுகவின் பிரமுகராக உள்ளார். இவர் கொக்கெய்ன் வைத்திருப்பதாக மதுரை மத்திய போதை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திங்களன்று இரவு வத்தலகுண்டில் உள்ள அவரது இல்லத்தில் சோதனையிட்ட போதை தடுப்பு போலிசார் அருண் காரில் 250 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை கைப்பற்றினர். இதனையடுத்து அருண் கைது செய்யப்பட்டு மத்திய போதை தடுப்பு போலிசார் இவருக்கு கொக்கெய்ன் யாரிடமிருந்து கிடைத்தது. இதில் யார் யார் தொடர்புடையவர்கள், அல்லது அருணே கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டு வருகிறாரா? கொக்கைன் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கு என்ன தொடர்பு என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: