சேலம்,
குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என சேலம் மாவட்டஆட்சியர் ரோகிணி கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் செவ்வாயன்று சேலத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் ஏற்காடு சாலையில் உள்ள தனியார்பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்து கொண்டார். அப்போது, குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 29 சிறப்பு பள்ளியில் பயின்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில்அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கியதுடன், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தபால் தலையை வெளியிட்டார். இதன்பின் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகிவரும் வதந்திகளை நம்பவேண்டாம். அதேநேரம், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தென்பட்டால் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: