நாசிக்:
‘எனது தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தைச் சாப்பிட்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்’ என்று மகாராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே கூறியுள்ளார்.மகாராஷ்ட்டிரத்தின் பீமா கோரேகானைச் சேர்ந்தவர் சாம்பாஜி பிடே. இந்துத்துவா தலைவர்களில் ஒருவர். அண்மையில் தலித்துக்கள் நடத்திய விழாவில் வன்முறை நடத்தியதாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வந்திருப்பவர்.

இந்நிலையில், அவர் நாக்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில், ‘மாம்பழங்கள் சுவையானவை மட்டுமல்ல; சக்தி தரக்கூடியவை’ என்று கூறியுள்ள சாம்பாஜி, ‘என்னுடைய தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தைச் சாப்பிட்ட பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் மகன்கள் பிறந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், மாம்பழத்தின் சக்தி குறித்து ஏற்கெனவே இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளதாகவும் உளறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.