நீலகிரி,
யூகலிப்டஸ் மற்றும் சீகை, பைன் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி மரவேலை மற்றும் பொதுதொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாசபையில் வலியுறுத்தப்பட்டன.

நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொதுதொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 5 ஆம் ஆண்டு பொதுசபை கூட்டம் கோத்தகிரியில் உள்ள வி.பி.சிந்தன் நூற்றாண்டு அரங்கத்தில் (அன்னமார் காட்டேஜ் ) நடைபெற்றது. முன்னதாக சங்க கொடியை மூத்த தோழர் வேலுசாமி ஏற்றி வைத்தார். இப்பேரவைக்கு டி.மாணிக்கம் தலைமை தாங்கினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில கன்வீனர் மகாலட்சுமி துவக்கி வைத்தார். சிஐடியு மாநில செயலாளர் கோபிகுமார், மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்டசெயலாளர் ஜெ.ஆல்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் எ.முருகன், பொருளாளர் வி.பொன்னுதுரை அறிக்கையை முன்வைத்து பேசினர்.

தீர்மானங்கள்;
இந்த மகாசபையில், நலவாரியத்தை பாதுகாப்பதுடன், பணப்பயன்களை பயனாளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மரம் வளர்ப்போருக்கு நிவாரண நிதியாக மாதம் ரூ.1000 வழங்க வேண்டும். யூகலிப்டஸ் மற்றும் சீகை, பைன் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை அரசுகள் அமல்படுத்தி மரவேலை மற்றும் பொது தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கௌரவ ஆலோசகராக எம்.வேலுச்சாமி, கௌரவ தலைவராக ஜெ.ஆல்துரை, தலைவராக எஸ்.மணிமோகன். பொதுச் செயலாளராக ஏ.முருகன். பொருளாளராக வி.பொன்னுதுரை, துணைத் தலைவர்கள் பி.ஆறுமுகம், பி.மாணிக்கம், கலைமணி. துணைசெயலாளர்கள் ஏ.கே.அமிர்தலிகம், வி.சிவகுமார், வி.முத்து மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக 27 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.