தில்லி,
இனி வரும் காலங்களில் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 6ம் தேதி நடந்த நீட் தேர்வின் போது 5000க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வெளி மாநிலங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுதிய மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பதற்றத்தால் உயிரிழந்தார்.
நீட் தேர்வுக்கு தொடர்ந்து தமிழகத்தில் எதிர்ப்பு உள்ள நிலையில் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ நடத்தாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்த உள்ளது. ஆண்டிற்கு 2 முறை ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: