தாராபுரம்,
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராடுவோம் தமிழகமே பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக தாராபுரம் பிரச்சாரத்தில் மாற்றம் நம் கையில் தான் உள்ளது. போராட்டமே நம்மை தீர்மானிக்கும் என மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் கூறினார்.

போராடுவோம் தமிழகமே என்ற அறைகூவலுடன் தாராபுரத்தை அடுத்த சோமானுத்திற்கு பிரச்சார பயணக்குழு தலைவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், கே.கனகராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, என்.அமிர்தம், ஏ.ராதிகா, , தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுசெயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தாராபுரம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனபேரணியுடன் துவங்கிய பிரச்சாரகுழுவினற்கு சோமனுத்து மாரியம்மன் கோவில் திடலில் கிளை செயலாளர் கே. மனேகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் உரையாற்றுகையில், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நாட்டில் பெரும்பகுதியான மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். 70 சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தொழில்கள், வர்த்தகம் பெருகியதால் கிராமங்கள் தேய்ந்து, நகர்புறம் வளர்ந்து விட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்துவிட்டனர்.

இந்த சோமனுத்து பகுதி பேரூராட்சி பகுதியாகும். விவசாயம், விவசாய கூலி, கட்டுமான தொழில்தான் இந்த பகுதியின் பிரதான வேலைவாய்ப்பு. இந்த தொழில்கள் தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். அதுதான் ஒட்டுமொத்த இந்தியாவின், தமிழ்நாட்டின் நிலைமையாக உள்ளது. இந்த ஊரில் 2,000 ஏக்கர் பாராம்பரியமாக நடைபெற்று வந்த விவசாய நிலப்பரப்பு இன்று சுருங்கி விட்டது. இதனால் அதை நம்பியிருந்த விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டனர். ஆட்சியில் இருந்த, இருந்துகொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை மேம்படுத்தவோ, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயத்தின் மீது கவனம் செலுத்தி விவசாயத்தை வளர்ச்சியடைச்செய்ய போதுமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. விவசாயத்திற்கு அடிப்படையான நீராதாரங்களை பாதுகாக்கவில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் முதலாளித்துவத்தை வளர்ப்பது, பண்ணை முதலாளிகளை வளர்ப்பது. வர்த்தக சூதாடிகளை வளர்ப்பது, அந்நிய நாட்டு முதலாளிகளை குடிஅமர்த்துவது போன்ற வேலைகளையே செய்து வருகின்றனர். விவசாயம் நசிந்துவிட்ட இன்றைய சூழலில் மிச்சமிருக்கும் விவசாயிகளும் நிலங்களை விற்றுவிட்டு நகர்புறங்களுக்கு சென்றுவிடலாமா என்ற சிந்தனைக்கு தள்ளுப்பட்டுவிட்டனர்.

நூறு நாள் வேலை திட்டம் :
விவசாய கூலிகள் திருப்பூருக்கும், கேரளாவுக்கும் வேலைக்கு சென்றுவிட்டனர். இதற்கு தீர்வு என்ன, மாற்று என்ன என்பது குறித்து சிந்திப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி நூறுநாள் வேலைத்திட்டத்தை பெற்று தந்தது. தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளுக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என போராடி வருகிறது. சோமனுத்து பேரூராட்சி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் நசிந்துவிட்ட சூழ்நிலையில் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டனர். தமிழகத்தில் உள்ள 538 பேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைதிட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து போராடினோம். தொடர்ந்து போராடிவருகிறோம். ரஜினி போன்றவர்கள் சினிமாவில் ஏழைகளுக்காக போராடுவார்கள், அக்கிரமத்தை எதிர்த்து கேள்வி கேட்பார்கள். ஆனால் நிஜத்திலே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூகவிரோதிகள் என கூறுவார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. ஸ்

டெர்லைட் ஆலை தாமிரம் தயாரிப்பதாக கூறுகிறது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற தொழிற்சாலையை மூடுவதற்கு பதிலாக, போராடுவர்களை கொச்சை படுத்துவதுடன் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சிசெய்த மார்க்சிஸ்ட் கட்சிதான் நேர்மையான ஆட்சி, ஊழலில்லாத ஆட்சி, ஊழல் குற்றச்சாட்களே இல்லாத முதல்வர்கள் என உலகமே பாராட்டுகிறது. உலகத்திற்கே முன்னுதாரணமாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு வந்தால் பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்படும். மக்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும். மாறாக குற்றவாளிகள் கையில் ஆட்சியை கொடுத்துவிட்டோம். திருடர்கள் கையில் தேசத்தை கொடுத்துவிட்டு உரிமையை கேட்டால் எவ்வாறு கிடைக்கும். எனவே மாற்றம் என்பது நம் கையில்தான் உள்ளது. நமது ஒற்றுமையில் உள்ளது. போராட்டமே நம்மை தீர்மானிக்கும், தேசத்தை தீர்மானிக்கும். பதவிக்காக நாட்டுமக்களை திசைதிருப்பி விடுபவர்கள் கையில் மீண்டும் அதிகாரம் சென்றுவிடக்கூடாது இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சார பயணக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து வந்த பிரச்சாரக்குழுவை காரத்தொழுவு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துகுளம் தாலுகா குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மடத்துக்குளம் பேருந்து நிலையம் முன்பு மடத்துகுளம் தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் பிரச்சாரத்தின் நோக்கத்தை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ. லாசர், மாநில குழு உறுப்பினர் ஏ. ராதிகா ஆகியோர் உரையாற்றினர். பின்னர் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் மருள்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தின் வந்த தோழர்கள் வரவேற்பு அளித்தனர். குரல்குட்டையில் ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ் தலைமை தாங்கினார். பிரச்சார நோக்கத்தை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் உரையாற்றினர்.

உடுமலை நகருக்கு வந்த பிரச்சார பயணத்திற்கு போடிபட்டி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்திற்கு நகரக்குழு உறுப்பினர் தெண்டபானி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் என். அமிர்தம், ஆர். பத்ரி ஆகியோர் உரையாற்றினர். குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றிய செயலாளர் என். சசிகலா தலைமை தாங்கினார். மாநிலக் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் உரையாற்றினர்.இந்த பிரச்சார பயணக்குழுவில் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாநிலகுழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உண்ணிகிருஷ்ணன், சி. சுப்பிரமணியம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொது செலாளர் யு.கே. சிவஞானம், திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர்கள்வெ. ரங்கநாதன், அ. பஞ்சலிங்கம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள்.இந்த பிரச்சார பயணத்தின் மக்கள் மனதை முழுமையாக கவரும் வகையில் இருந்தது கலைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றன.

Leave A Reply

%d bloggers like this: