சென்னை,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் நேற்று (10.06.2018) இரவு சென்னை வருவதற்கு
தஞ்சை ரயில் நிலையத்திற்குமோட்டார் சைக்கிளில் வந்தபோது, அடையாளம் தெரியாத
இரண்டு நபர்கள் அவரை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர். காயமுற்ற பெ. மணியரசன் அவர்கள் உடனடியாக தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார். மணியரசன் மீது வன்முறையாளர்கள் தொடுத்த இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கருத்தை, கருத்தால் எதிர்ப்பதற்கு பதிலாக, மிரட்டுவது, கொலைவெறித் தாக்குதல்கள்
நடத்துவது, கொலை செய்வது என்பது அதிகரித்து வருவது தமிழ்நாட்டில் நிலவி வரும் ஜனநாயகத்திற்கே மிகப் பெரிய ஆபத்தான செயலாகும்.

எனவே, திரு. பெ. மணியரசன் அவர்களை தாக்கிய குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Leave A Reply