சேலம்,
நெடுஞ்சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். பணி நீக்ககாலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வரைமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பணியாளர்களின் ஊதிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் தலைமையில் சாலைப்பணியாளர்கள் சேலம் எடப்பாடி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் மு.தங்கராசு தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அ.நிஜாம் சிறப்புரையாற்றினார். கோட்ட துணை தலைவர் க.மாரியப்பன், இணை செயலாளர் ஆ.செல்வம், தா.கலைவாணன் அந்தோணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.