கோவை,
சிறுபான்மை நலக்குழுவின் சார்பில் கோவையில் சர்வமத தலைவர்கள் பங்கேற்று இப்தார் விருந்து நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள கமலம் துரைசாமி திருமணமண்டபத்தில் இப்தார் நடைபெற்றது. இந்நிகழ்விற்குநலக்குழுவின் கோவை மாவட்ட தலைவர் முகமதுமுசீர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட்டரிக் வரவேற்புரையாற்றினார்.இதில் சாஸ்தஸ்ரீ வராஹிமணிகண்ட சுவாமிகள், மஸ்ஜித்தே இப்ராகிம் தலைமை இமாம் அப்துல்ரதுஹீம், போதகர் பாஸ்டர்டேனியல்,கவிஞர் கவிதாசன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியுமாவட்ட தலைவர் சி.பத்மநாபன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மக்கள்ஒற்றுமை மதநல்லிணக்கம் குறித்து உரையாற்றினர். இதனைத்தொடர்ந்துநடைபெற்ற இப்தார் விருந்தில் ஏராளமான சிறுபான்மையினர் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில், மாவட்ட பொருளாளர் எஸ்.புனிதா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: