சென்னை,

இணைச் செயலாளர் நேரடி நியமனத்திற்காக அரசுத்துறையை சீரழிக்கும் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர் நிலையில் 10 உயர் அதிகாரிகளை
நேரடியாக பணி நியமனம் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மத்திய
அரசில் இணைச்செயலாளர்கள் நியமிப்பதற்கு சரியான விதிமுறைகள் உள்ளன.  எனவே }
திடீரென இணைச்செயலாளர்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரம் உள்நோக்கங்களை கொண்டதாகவே தெரிகிறது. ஆர்எஸ்எஸ் சார்புநிலை அதிகாரிகளை
நியமித்திடும் நோக்கத்துடன் இந்த விளம்பரம்  செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஏற்கனவே மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் பாஜகவினரைச் சார்ந்தவர்கள் பலர் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பணிபுரியும்
இணை செயலாளர் பொறுப்பிற்கும் சட்டவிரோதமாக பாஜக தனது ஆட்களை நியமிக்க முயற்சித்து வருவது அரசுத்துறைகளை சீரழிக்கும் மோசமான செயல் என்பதை  சுட்டிக்காட்ட
விரும்புகிறது. மத்திய அரசின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக்
கண்டிக்கிறது.

எனவே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டு தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகளை  ஏற்கெனவே
உள்ள நடைமுறைப்படி இணை செயலாளர் பொறுப்புகளில் பணியமர்த்த வேண்டுமென்றும்,
தற்போது மோடி அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தை உடனடியாக ரத்து செய்ய
வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை
வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: