திருநெல்வேலி,
மத்திய அரசு விவசாயிகளை பாதுகாக்கத் தவறி விட்டது என நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிபிஎம் பிரச்சாரம், பொது கூட்டம் நடைபெற்றது. இவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜகவால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மோடி பிரதமர் ஆவதற்கு முன் விவசாயிகளை பாதுகாப்போம்; அவர்கள் வளர்ச்சியில் துணை நிற்போம் என்றார். ஆனால், தற்போ
தைய நிலை என்ன ? விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளை பாதுகாக்க தவறி விட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து விட்டது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு பள்ளிக்கூடங்களை மூடுவதிலேயே குறியாக உள்ளது.

கேரளாவில் அரசு பள்ளிகூடங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. நமது தமிழகத்திலோ அதற்கு நேர் மாறாக உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என அவர் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: