பாட்னா: பீகார் அரசு மதுபானத்தை தடை செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் மதுபானம் பீகாரின் பல்வேறு பகுதிகளிலும் புழக்கதில் இருக்கிறது. இந்நிலையில் மதுவை மோப்பம் பிடிக்க நாய்களை பயன்படுத்த  பீகார் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த 20 சிறப்புப் பயிற்சி பெற்ற குட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. தெலங்கானாவின் உளவுத்துறை ஒருங்கிணைந்த பயிற்சி அகாடமியில் வெடிகுண்டு மற்றும் மதுபானத்தை மோப்பம் பிடிக்க நாய்கள் பயிற்ச்சி அளிக்கப்படும். இதற்காக 8-9 மாதங்கள் பயிற்சிக்கு பிறகு பீகார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றால் இதே போல் தெலங்கானாவிடமிருந்து பல நாய்கள் பெறப்படும் என பீகாரின் ஏ.டி.ஜி.பி வினேய் குமார் கூறியுள்ளார். சட்டவிரோதமாக மதுபானத்தை சேமிப்பதற்கு எதிராக பிரச்சாரத்தை கூர்மைப்படுத்துவதற்காக பீகார் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.