சென்னை,
அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் நிகழ்வுகளில் பங்கேற்க தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுத்துள்ள மத்திய அரசுக்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமுஎகச மாநிலத்தலைவர் ச.தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மதுரை அருகே உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டபோது வைகை நதி நாகரீகத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தார். இவை வரலாற்றுப் பொக்கிஷங்களாக மதிக்கப்படுகின்றன. இவற்றைக் கண்ணில் காட்டாமல் மைசூருக்கு கடத்திச் சென்று மூடி மறைத்துவிட மத்தியில் உள்ள மோடி அரசு முயற்சி செய்தது. உரிய நேரத்தில் தமுஎகச தலையிட்டு அந்த முயற்சியை முறியடித்தது. கீழடி ஆய்வு வெளிச்சத்திற்கு வந்து அகில இந்திய அளவோடின்றி உலக அளவிலும் தொல்லியல் ஆய்வு வரலாற்றிலும் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது. தமிழகமே பெருமிதம் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியது.

தொடர்ந்து ஓரிடத்தில் ஆய்வு மேற்கொண்டால் அது முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற தொல்லியல்துறை விதிகளைக் காலில் போட்டு மிதித்த மோடி அரசு அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றியது. அங்கேயும் அவருக்கு அகழாய்வுப்பணி ஒதுக்காமல் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களைப் பராமரிக்கும் பணியை கொடுத்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தது.  இப்போது தமது ஆய்வுகள் பற்றி உரையாற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. வடஅமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் முதல் தேதி வரை நடத்தவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்க ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியே ராமகிருஷ்ணன் அனுமதி கோரியுள்ளார். ஒரு மாதக் காலம் கடத்தி மே 25 ஆம் தேதி அனுமதி மறுத்துள்ள இந்தியத் தொல்லியல் துறை, ‘ உரிய அதிகார அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை’ என்று காரணம் கூறியுள்ளது.

இந்தியாவிலும் சில நாட்கள் இருந்து கொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் மோடியின் அரசு ஒரு வரலாற்று ஆய்வாளர் அமெரிக்காவின் 50 தமிழ் அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள அழைப்புக்கு அனுமதி மறுத்துள்ளது.இந்த செயல் அந்த அமைப்புகளை மட்டுமல்ல தமிழக மக்களையும் அவமதிப்பதாகும்;இழிவுபடுத்துவதாகும். கீழடி ஆய்வு குறித்தும் தமிழர்களின் தொன்மை நாகரீக வரலாறு குறித்தும் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிவிடக்கூடாது என்ற வன்மம் இந்த அனுமதி மறுப்பில் புதைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது சிரமமல்ல. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள் அவற்றின்மூலம் வெளிப்படும் வரலாற்று உண்மைகளைச் சொல்கிற ஓர் ஆய்வாளரின் உரிமை மறுக்கப்படுவதையும் பறிக்கப்படுவதையும் தமுஎகச ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இப்போது காலம் கடந்துவிடவில்லை. வரும் 29ஆம் தேதி தொடங்கும் அந்த நிகழ்வுகளில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மோடி அரசின் தொடர்ச்சியான கருத்துரிமை, பேச்சுரிமை பறிப்பின் ஓர் அங்கமாக இதனையும் எடுத்துக்கொண்டு தமுஎகச கிளைகளும் சமூக அக்கறை உள்ளவர்களும் முற்போக்காளர்களும் ஜனநாயக சக்திகளும் தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அதிகார பலத்தால் மூழ்கடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிராகக் கண்டனம் முழங்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை,ஜூன் 10- அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் நிகழ்வுகளில் பங்கேற்க தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுத்துள்ள மத்திய அரசுக்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமுஎகச மாநிலத்தலைவர் ச.தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மதுரை அருகே உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டபோது வைகை நதி நாகரீகத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தார். இவை வரலாற்றுப் பொக்கிஷங்களாக மதிக்கப்படுகின்றன.

இவற்றைக் கண்ணில் காட்டாமல் மைசூருக்கு கடத்திச் சென்று மூடி மறைத்துவிட மத்தியில் உள்ள மோடி அரசு முயற்சி செய்தது. உரிய நேரத்தில் தமுஎகச தலையிட்டு அந்த முயற்சியை முறியடித்தது. கீழடி ஆய்வு வெளிச்சத்திற்கு வந்து அகில இந்திய அளவோடின்றி உலக அளவிலும் தொல்லியல் ஆய்வு வரலாற்றிலும் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது. தமிழகமே பெருமிதம் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியது. தொடர்ந்து ஓரிடத்தில் ஆய்வு மேற்கொண்டால் அது முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற தொல்லியல்துறை விதிகளைக் காலில் போட்டு மிதித்த மோடி அரசு அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றியது. அங்கேயும் அவருக்கு அகழாய்வுப்பணி ஒதுக்காமல் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களைப் பராமரிக்கும் பணியை கொடுத்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தது. இப்போது தமது ஆய்வுகள் பற்றி உரையாற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

வடஅமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் முதல் தேதி வரை நடத்தவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்க ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியே ராமகிருஷ்ணன் அனுமதி கோரியுள்ளார். ஒரு மாதக் காலம் கடத்தி மே 25 ஆம் தேதி அனுமதி மறுத்துள்ள இந்தியத் தொல்லியல் துறை, ‘ உரிய அதிகார அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை’ என்று காரணம் கூறியுள்ளது. இந்தியாவிலும் சில நாட்கள் இருந்து கொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் மோடியின் அரசு ஒரு வரலாற்று ஆய்வாளர் அமெரிக்காவின் 50 தமிழ் அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள அழைப்புக்கு அனுமதி மறுத்துள்ளது.இந்த செயல் அந்த அமைப்புகளை மட்டுமல்ல தமிழக மக்களையும் அவமதிப்பதாகும்;இழிவுபடுத்துவதாகும். கீழடி ஆய்வு குறித்தும் தமிழர்களின் தொன்மை நாகரீக வரலாறு குறித்தும் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிவிடக்கூடாது என்ற வன்மம் இந்த அனுமதி மறுப்பில் புதைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது சிரமமல்ல.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள் அவற்றின்மூலம் வெளிப்படும் வரலாற்று உண்மைகளைச் சொல்கிற ஓர் ஆய்வாளரின் உரிமை மறுக்கப்படுவதையும் பறிக்கப்படுவதையும் தமுஎகச ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இப்போது காலம் கடந்துவிடவில்லை. வரும் 29ஆம் தேதி தொடங்கும் அந்த நிகழ்வுகளில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.  மோடி அரசின் தொடர்ச்சியான கருத்துரிமை, பேச்சுரிமை பறிப்பின் ஓர் அங்கமாக இதனையும் எடுத்துக்கொண்டு தமுஎகச கிளைகளும் சமூக அக்கறை உள்ளவர்களும் முற்போக்காளர்களும் ஜனநாயக சக்திகளும் தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அதிகார பலத்தால் மூழ்கடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிராகக் கண்டனம் முழங்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.